ETV Bharat / state

'திமுகவில் 70 வயதானாலும் இளைஞர் அணியில் இருக்கலாம்' - அமைச்சர் சாடல் - ADMK Vs DMK

கரூர்: திமுகவில் 70 வயது ஆனாலும் இளைஞர் அணியில் இருக்கலாம், ஆனால் தங்களுடைய இயக்கத்தில் அப்படி இருக்க முடியாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

minister-vijayabaskar
author img

By

Published : Sep 11, 2019, 2:49 PM IST

Updated : Sep 11, 2019, 2:58 PM IST

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார். இதில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், 434 குளங்களுக்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இதில் 75 விழுக்காடு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவினர் முன்அனுமதி பெறாமல் குளத்தை தூர்வாருவதாகக் கூறிவிட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது தேவையில்லாதது என்றார்.

minister-vijayabaskar
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பேச்சுக்கு பதிலடி

திமுக இளைஞர் அணியில் சேர்வதற்கு அக்கட்சி எம்எல்ஏ அன்பில் மகேஷ் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்களது இளைஞர் அணியில் சேர்வதற்கு தனக்கு வயதில்லை என்றும் திமுகவில் 70 வயது ஆனாலும் இளைஞர் அணியில் இருக்கலாம், ஆனால் தங்களுடைய இயக்கத்தில் அப்படி இருக்கும் முடியாது என்று சாடினார்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

Intro:திமுகவில் இளைஞரணி உறுப்பினராக சேர்வதற்கு எனக்கு வயதில்லை - அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேசியதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

Body:கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக இன்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதில் மற்றொரு பகுதியாக அதே குளத்தை மற்றொரு இடத்தில் தூர்வாரும் நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குளத்தை தூர்வாரும் நிகழ்ச்சி நடைபெற்று சென்ற வழியில் பொதுமக்கள் 3 சென்ட் நிலம் எங்கே என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் செந்தில் பாலாஜி காரை வழிமறித்து கோஷங்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-

434 குளங்களுக்கும் அனுமதி பெற்று நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இதில் 75 சதவீத பணிகள் நிறைவுற்று உள்ளன.

ஆனால் திமுகவினர் அனுமதியும் பெறாமல் குளத்தை தூர்வாருதல் என்று கூறிவிட்டு பேட்டி அளிப்பது தேவையில்லாதது அனுமதிபெற்று குலத்தை தூர்வாருதல் வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் அனுமதி பெற்று குளத்தை தூர்வாரி இருக்கின்றார்கள்.

திமுகவைச் சேர்ந்த திருவெரும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவில் இளைஞர் அணியில் சேர்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆனால் இளைஞர் அணியில் சேர்வதற்கு எனக்கு வயதில்லை அவர்கள் இயக்கத்தில் 70 வயது ஆனாலும் இளைஞர் அணியில் இருக்கலாம் ஆனால் எங்களுடைய இயக்கத்தின் அப்படி இருக்கும் முடியாது மேலும் இதில் நன்கு பழகக் கூடிய மகேஷ் அவர்களுக்கு அழைப்பு விடுவதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Sep 11, 2019, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.