கரோனா தொற்றுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை முடிந்து 5 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக, பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அந்தவகையில், கரூர் மாவட்டத்தின் அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்ட நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என பூரண குணமடைந்த ஐந்து பேர் இன்று மதியம் 3 மணிக்கு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் இதுவரை 44 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 42 பேர் வீடு திரும்பியுள்ளனர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நபர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 நபர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நபர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஸி வெண்ணிலா வாழ்த்தி வழியனுப்பினார். அவருடன் கூடுதல் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் உடன் இருந்தார்.
இதையும் படிங்க: