கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், “தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோரின் அறிவுரையின் கீழ் அனைத்து திரையரங்குகளும், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் என்றும் அனைத்தும் கரோனா வைரஸ் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி துறை நிறுவனங்கள் மட்டுமில்லாமல், ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் 42 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே விமான நிலையித்திலும் சோதனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் இங்கு வந்தவுடன் சுகாதாரத்துறையின் சார்பில் கரூரிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இரண்டு பேரினை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
கண்காணிப்பு என்றால், அவர்களுக்கு கரோனா பாதிப்பிருக்கு என்று பொருள் இல்லை. கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின் படி 30 படுக்கைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய முறையில் முன் கூட்டியே வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நீதிமன்றம், மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
பொதுமக்களும் இதனை பயன்படுத்திவருகின்றனர். கரூர் மாவட்டங்களில் தேர்வு நடக்கும் வகுப்புகளை தவிர அனைத்து பள்ளிகளிலும் மூட உத்திரவிட்டுள்ளது.
மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (கோட்டாட்சியர் அலுவலகம் அருகே) 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் வைக்கப்பட்டுள்து. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்.