கரூர் லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தின் முன்னே சென்ற செங்கல் லாரியை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து லாலாபேட்டை காவல் துறையினர் விசாரிக்கையில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் நடந்த வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!