கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார், இளங்கடையைச் சேர்ந்தவர் முருகன் ஆழ்வார் ரமேஷ் (29). இவரது நண்பர் இடலாக்குடியைச் சேர்ந்த லாசர் (50). இருவரும் இன்று மயிலாடி அருகில் உள்ள மருந்து வாழ்மலை பிரதான கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றனர்.
அவர்கள் தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழ்வார் ரமேஷ் திடீரென அருகில் உள்ள மதகில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். இதனால் நீருக்குள் சிக்கிய அவர் உயிரிழந்தார். சிறிது நேரத்தில் சடலமாக ஆற்றில் மிதந்து வந்த அவரது உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாசர் அவரது உடலை மீட்டு அங்குள்ள படிக்கட்டில் வைத்துவிட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அஞ்சுகிராமம் உதவி ஆய்வாளர் பிச்சை மற்றும் காவலர்கள், ஆழ்வார் ரமேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அவர்கள் குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: