ETV Bharat / state

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா

கன்னியாகுமரி: கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

young woman held dharna for she wants to stay with her husband in kumari

author img

By

Published : Feb 20, 2021, 4:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரது கணவர் முத்தையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக முத்தையா குடிபோதையில் பவித்ராவை தாக்கியதாக தெரிகிறது. அவரது நண்பருடன் சேர்ந்து பவித்ராவைத் தகாத வார்த்தையிலும் பேசி தாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா

இதுகுறித்து பவித்ரா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தனது தாயார் மற்றும் கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.