கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்பாபு (28). இவர் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவியின் தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்த மதன்பாபு, மனைவியின் தங்கையான 19 வயது இளம் பெண்ணோடு திருமணத்தை மீறிய தொடர்பு வைத்திருந்தார்.
மாமியார் வீட்டில் இளம்பெண் தனியாக இருக்கும்போது அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். மருமகன் என்பதால் அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படவில்லை. இந்நிலையில், மதன்பாபு மனைவியின் தங்கையை கர்ப்பம் ஆக்கியுள்ளார்.
கர்ப்பமடைந்த அந்த இளம்பெண் பெற்றோருக்குத் தெரியாதபடி இருந்து வந்துள்ளார். ஆனால், தற்போது 6 மாத கர்ப்பிணியான அவரது செயல்பாட்டில் எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, பெற்றோர் இளம்பெண்ணிட்டம் விசாரித்தபோது உண்மை சம்பவம் அம்பலமானது.
அக்காவின் கணவரே கர்ப்பமாக்கிய கதையை கேட்ட பெற்றோர், மதன்பாபுவின் மனைவி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், மதுபாபுவின் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'சிறுமி பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'