கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டவிளை மாணிக்தினார் புது தெருவில் சென்ற 31 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா சுமார் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
அவர்களிடம் பெயர் மாற்றித் தருவதாகக் கூறி அசல் பட்டாவை சென்ற ஒரு ஆண்டுக்கு முன்பு வருவாய்த் துறையினர் பெற்றுள்ளனர்.
பின்னர் அமைச்சர் ஒருவர் கன்னியாகுமரி வருகிறார். அவர் மூலமாக விழா ஒன்றில் வைத்து அசல் பட்டாவை தந்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை பொதுமக்களிடம் அசல் பட்டாவை வழங்கவில்லை.
இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 14 புகார் மனு அளித்தனர்.
மேலும் முதலமைச்சர் வரும் 23ஆம் தேதி கன்னியாகுமரி வரும் நிலையில் அவர் கைகளினால் தங்களது வீட்டுமனை பட்டாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
குமரியில் வருவாய்த் துறை அலுவலர்கள் மீது பெண்கள் புகார் - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வருவாய்த் துறை அலுவலர்கள் இலவச வீட்டுமனை பட்டாவின் அசல் பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு திரும்ப வழங்க மறுப்பதாக பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.