கடலில் ஏற்படும் சூறைக்காற்று, புயல்களால் மீனவர்களின் படகுகள் திசைமாறி, வேறு இடங்களுக்கு இழுத்து செல்லப்படுகிறது. இதனால் மீனவர்கள் பல நாட்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பைக் கருதி அனைத்து நாட்டு படகுகளுக்கும், வயர்லெஸ் வாக்கி டாக்கி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் நாட்டு படகு மீனவர்களுக்கும் வயர்லெஸ் வாக்கி டாக்கி கருவி வழங்கப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, 'இந்த வாக்கி டாக்கி கருவி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்றனர்.
மேலும், 'விசைப்படகு மீனவர்களுக்கு கொடுத்திருப்பதுபோல், ஜிபிஎஸ் கருவியும் எங்களுக்குத் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்ற கோரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டுப் படகு வலையில் சிக்கிய அரியவகை நண்டு - காட்சியகத்தில் ஒப்படைப்பு