ETV Bharat / state

விசில் ஊதியும் சைகை மொழிகளிலும் கோரிக்கைகளை வலியுறுத்திய மாற்றுத்திறனாளிகள்

author img

By

Published : Jul 1, 2022, 7:17 PM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாத மற்றும் மாற்றுத்திறனாளிகள், விசில் ஊதியும் சைகை மொழிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசில் ஊதியும் சைகை மொழிகளிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் - பொதுமக்கள் சோகம்!

கன்னியாகுமரி: தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொதுநலச்சங்கத்தின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், 'அரசு சைகை மொழியை விரைவில் அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை 3,000 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும்.

80% மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு, காது கேளாதவருக்கு மட்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு விழுக்காடு வேலை வாய்ப்புத்தர வேண்டும். காது கேளாத மற்றும் வாய் பேசாத மாணவர்கள் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க காது கேளாத கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும்.

பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையங்களில், கட்டாயமாக சைகை மொழிப்பயிற்சி பெற்றவர் நியமிக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்க வேண்டும். தொகுப்பு வீடுகளில் அடிப்படையில் இலவச வீடு வழங்க வேண்டும்” உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால், சைகை மொழியிலும் மற்றும் விசில் ஊதியும், தங்கள் உணர்வுகளை அரசுக்கு வெளிப்படுத்தினர். இது அவ்வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்களின் மத்தியில் சோகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.