குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வைத்தியநாதபுரம், இசங்கன்விளை, வடலிவிளை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கிராம சபைக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.
திமுக குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ்ராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: மோடியே வந்தாலும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின்