ETV Bharat / state

நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறிய தொண்டர்கள் - வைரலாகும் வீடியோ - தனிமனித துதி பாடுதல்

கன்னியாகுமரி: பத்மாநாபபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு வெளியேறுவதாகக் கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

nam tamilar
nam tamilar
author img

By

Published : Nov 17, 2020, 10:38 PM IST

கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ஒருவர் தனக்கு சாதகமான ஆள்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து கட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர்களை ஓரம் கட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தலைமை தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து வருவதாகவும், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கு எட்டு பேர் விருப்ப மனு கொடுத்த நிலையில் கட்சி தலைமைக்கு காட்டாமல் மாநில நிர்வாகி தனது ஆதரவாளர் ஒருவருக்கு வாய்ப்பு தந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி தலைவர் அகமது கபீர் தலைமையில் வேர்கிளம்பி பகுதியில் உள்ள தொகுதி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நாம் தமிழரை விட்டு வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளனர்.

அதனோடு நாம் தமிழர் கட்சியிலும் தனிமனித துதி பாடுதல் இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அதுபற்றிய சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ் தேசியம் பற்றிய நடவடிக்கை இருப்பதாக தெரியவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்த நிர்வாகிகள், அலுவலகத்தில் வைத்திருந்த கட்சி பேனர்களையும், சீமானின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்து கோஷங்கள் எழுப்பினர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறிய தொண்டர்கள்

இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கூண்டோடு விலகி மாற்று கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.