உலக ஜெனிவா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மழை நீர் கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக ஜெனிவா தின பேரணி நடைபெற்றது.
மழை நீர் சேமிப்பு, மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகளுடன் பேரணியாக சென்றனர்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி நீதிமன்ற சாலை, டதி ஸ்கூல் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்து சேர்ந்தது.