இதுகுறித்து கடல் தகவல் சேவைமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் மூன்று முதல் 3.8 கிலோ மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்படும்.
மேலும், வருகின்ற 30ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து மத்திய அரபிக் கடல் பகுதிகளிலும், கிழக்கு மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.