கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 4.30 அடியாக இருந்தது. பெருஞ்சாணியில் 36.45 அடியும் சிற்றாறு-1ல் 7.84 அடியும், சிற்றாறு-2ல் 7.93 அடியும், பொய்கையில் 7.10 அடியும் மாம்பழத்துறையாறு அணையில் 39.29 அடியளவும் நீர்மட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், வரும் 31ஆம் தேதி வரை தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.