ETV Bharat / state

4000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் - politicals news

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல் துறையினர் ராணுவத்தினர் உட்பட 4000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

அச்சமின்றி வாக்களிக்கலாம்
அச்சமின்றி வாக்களிக்கலாம்
author img

By

Published : Mar 17, 2021, 4:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ’’ கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆறு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 631 இடங்களில் 2,243 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 63 இடங்களில் உள்ள 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை மற்றும் 5 இடங்களில் 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாடு கேரளா எல்லையில் சமூக விரோதிகள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக 34 எல்லை சோதனை சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எல்லை சார்ந்த குற்றவாளிகளை இருமாநில காவல் துறையினருடன் கலந்தாலோசித்து கண்காணிக்கிறோம். மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்ற 446 துப்பாக்கிகளில் வங்கி பயன்பாடு விளையாட்டு உள்ளிட்ட 86 துப்பாக்கிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டு மீதமுள்ள துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது.

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 1147 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 1076 குற்றவாளிகளுக்கு பிணை நிறைவேற்றபட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 210 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டு 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் தேர்தல் பணியில் சுமார் 1500 முன்னாள் ராணுவ வீரர்கள், 2000 காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர். பின்னர், தேர்தல் நடைபெறுவதற்கு கடைசி ஒரு வாரத்திற்கு முன் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அகற்றப்படுவார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: ’தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.