குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பெண் வாக்காளர்கள், 203 இதர வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கரோனா தொற்று காரணமாக வாக்காளர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 549 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2,243 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவைப்படும் என்பதால் அதற்குரிய நடவடிக்கையில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியைப் பார்வையிட்ட கே.என். நேரு