ETV Bharat / state

Viral:பட்டப்பகலில் அரசுப்பேருந்தை கற்களை காட்டி மிரட்டிய போதை ஆசாமி - Viral video

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் அருகே சாலையில் பட்டப்பகலில் பயணிகள் முன்னிலையில் அரசுப்பேருந்தை மது போதையில் இருந்த இளைஞர் கற்களைக் காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டபகலில் அரசு பேருந்தை கற்களை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

author img

By

Published : Oct 7, 2022, 6:47 PM IST

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் இன்று(அக். 7) அரசுப்பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றும் நேரத்தில், அந்தப்பகுதியில் மது போதை உச்ச கட்டத்தில் இருந்த மதுப்பிரியர் ஒருவன், அவனது இரண்டு கைகளில் கற்களைக்கொண்டு பேருந்தை மிரட்டியுள்ளார்.

பட்டப்பகலில் ரோட்டில் கற்களைக் காட்டி மிரட்டிய இளைஞரால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து காவல்துறையினர் வருவதைப் பார்த்த போதை இளைஞர் தப்பிச்சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகளை சேகரித்த காவல்துறையினர் போதை இளைஞரைத்தேடி வருகின்றனர். காவல்துறையினரின் ரோந்து மற்றும் கண்காணிப்புப்பணிகள் போதுமான அளவு இல்லாததே, இது போன்ற குற்றங்கள் நடந்து வருவதற்கு முக்கிய காரணம் என பயணிகள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

Viral:பட்டப்பகலில் அரசுப்பேருந்தை கற்களை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

மேலும், பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பகுதியில் உள்ள தின்பண்ட கடையில், அந்த இளைஞர் சலம்பும் காட்சிகளை அப்பகுதிகளில் உள்ளோர் காணொலியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதையும் படிங்க:நில உரிமையாளரைத்தாக்கி ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.