ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பில் சந்தேகம் நீடிக்கிறது - விஜயதாரணி - மத்திய மாநில அரசுகள் சாதாரண மக்களுக்கு நெருக்கடியான தருகிறது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பில் சந்தேகம் நீடிப்பதாகவும், அதனை தீர்க்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதி இறப்பில் சந்தேகம் நீடிக்கிறது- காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி

author img

By

Published : Jul 24, 2022, 5:12 PM IST

கன்னியாகுமரி: விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜயதாரணி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "மாணவி ஸ்ரீமதியின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தீர்க்க காவல்துறை தங்கள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மாணவி இறப்பில் நியாயம் கிடைக்கும் வரை அனைத்து தரப்பு பெண்களும் போராட முன் வர வேண்டும்.

இது போல் ஏராளமான பள்ளிகளில் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

மாணவி ஸ்ரீமதி இறப்பில் சந்தேகம் நீடிக்கிறது- காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி

அரிசிக்கு ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு என மத்திய அரசும், சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு என மாநில அரசும் மாறி மாறி மக்கள் மீது வரி சுமைகளை சுமத்தி வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகள் சாதாரண மக்களுக்கு நெருக்கடியான ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றன. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.