ETV Bharat / state

விஜய் ரசிகர்கள் நடத்திய பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி - பிகில் திரைப்படம்

கன்னியாகுமரி: விஜய் ரசிகர் மன்றம் சார்பாக பெண்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விஜய் ரசிகர்கள் நடத்திய பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி, bigil football match for women

author img

By

Published : Dec 6, 2019, 8:29 AM IST

நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 28ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் தோவாளை, ஆரல்வாய்மொழி, அருமனை உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன.

விஜய் ரசிகர்கள் நடத்திய பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி

இறுதிப்போட்டியில் ஆரல்வாய்மொழி அணியை தோவாளை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பிகில் படத்தில் பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டு குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் கால்பந்தாட்ட போட்டி நடத்தியிருக்கின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக பெண்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கால்பந்து போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.Body:குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 28 ஆம் ஆண்டை முன்னிட்டு பெண்கள் முன்னேற வேண்டும் அவர்களுக்கு ஊக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் தோவாளை, ஆரல்வாய்மொழி , அருமனை உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் ஆரல்வாய்மொழி அணியை தோவாளை அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.