நடிகை மீரா மிதுன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களைத் தெரிவித்து காணொலி வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், குமரி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ”நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து நடிகை மீரா மிதுன் மிகவும் தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார். மேலும் விளம்பரத்திற்காக சமூக ஊடகங்களில் வீடியோ பதிவு செய்து வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார்.
எனவே அவர் மீது கடுமையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்தும் வெளியிட்ட காணொலியை உடனடியாக நீக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:மீரா மிதுன் மீது புகார் கொடுத்த விஜய் ரசிகர்கள்!