ETV Bharat / state

குமரியில் மூன்று மடங்கு உயர்ந்த காய்கறி விலை

நவராத்திரி விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள சந்தைகளில் காய்கறிகள் விலை வழக்கத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

Vegetable price  kanyakumari vegetable price  navaratri  Kanyakumari  market  vegetable market  நவராத்திரி விழா  காய்கறி விலை  காய்கறி சந்தை
காய்கறி விலை
author img

By

Published : Oct 1, 2022, 6:14 PM IST

கன்னியாகுமரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது அசைவ உணவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவாரும் காய்கறிகளை அதிகம் வாங்கி வருகின்றனர். மேலும் கோயில்களில் நவராத்திரியை முன்னிட்டு, தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. அதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடர் மழையால் உற்பத்தி குறைந்து வருவதன் காரணமாக அனைத்து காய்கறிகளும் மூன்று மடங்குக்கு மேல் விலை உயர்ந்து உள்ளதாக கூறபடுகிறது. கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காய்கறி விலை

இதேபோன்று 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் 100 ரூபாயாகவும், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீட்ரூட் 60 ரூபாய் ஆகவும் 20 ரூபாய் விற்கப்பட்ட கத்திரிக்காய் 60 ரூபாயாகவும், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 50 ரூபாயாகவும் அனைத்து காய்கறிகளும் மூன்று மடங்கு விலை உயர்ந்து உள்ளது. வேறு வழியின்றி பொதுமக்களும் இதனை வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க: மாத தவணைத் தொகையை அதிகமாக செலுத்தினால் வட்டிச்சுமையை குறைக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.