காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலச் செயல்தலைவரும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான பிரபல தொழிலதிபர் ஹெச். வசந்தகுமார் கரோனா தொற்று காரணமாக கடந்த 10ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஆக. 28) மாலை மரணமடைந்தார்.
வசந்தகுமார் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்த நிலையில் அவரது உடல் சென்னை தி. நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், வசந்த் அண்ட் கோ நிறுவன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள், நிறுவன ஊழியர்கள் புடைசூழ அகஸ்தீஸ்வரம் கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கிருந்த அனைவரும் கண்ணீர் மல்க அழுதது அனைவரையும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அவரது இல்லத்தில் உறவினர்கள், பணியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.
அதன் பிறகு ஆற்றங்கரையில் உள்ள அவர்களது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை குடும்பத்தார் மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும்போதும் நல்லடக்கம் நிகழ்ச்சியின்போதும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்பாடுகளையும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
நல்லடக்கம் மேற்கொள்வது சம்பந்தமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் உறவினர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இறுதி அஞ்சலியில் வசந்தகுமாரின் அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது வசந்தகுமாரின் உடல்! - வசந்தகுமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது
கன்னியாகுமரி: மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் உடல், நல்லடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டுவரப்பட்டது.