கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் ரயில்வே மார்கத்தில், இரட்டை ரயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் கலுங்கடி அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தேரி பாசனக் குளத்தை கடந்து, ரயில் பாதை செல்வதால், குளத்தில் ஒரு பகுதி ரயில் பாதைக்காக எடுக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கலுங்கடி ஊருக்குச் செல்லும் பாதை, குளத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் மழையால் துண்டிக்கபட்டது. பாதை துண்டிக்கபட்ட இரண்டு மாதங்கள் மேல் ஆகியும் இதுவரை அரசு தரப்பில் சீரமைத்து கொடுக்காததால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு செவிகொடுத்த வசந்தகுமார் எம்.பி, இதன் முதற்கட்ட பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். மேலும், அரசு தரப்பில் இதில் பாலம் அமைத்து கொடுக்கவில்லை என்றால், மக்களவை உறுப்பினர் நிதி மூலம் கட்டி தரப்படும் என கிராம மக்களுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.