ETV Bharat / state

உழைப்பால் உயர்ந்த ஹெச்.வசந்தகுமார் உடல்  நல்லடக்கம்! - வசந்தகுமார் மறைவு

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி செலுத்தியபின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமார் மறைவு
வசந்தகுமார் மறைவு
author img

By

Published : Aug 30, 2020, 2:02 PM IST

கன்னியாகுமரி: மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச். வசந்தகுமார் உடல் அவர் பிறந்த ஊரில், தாய், தந்தையர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச். வசந்தகுமார், கரோனாவிலிருந்து மீண்டும் சிகிச்சைப் பலனளிக்காமல் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, பின் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான குமரி - அகஸ்தீஸ்வரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, காலை 6 மணியளவில் ஊர் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால், கேரள மாநில மாவேலிக்கரை மக்களவை உறுப்பினர் கொடிக்குனில் சுரேஷ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ் குமார், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆலங்குளம் தொகுதி பூங்கோதை உள்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உழைப்பால் உயர்ந்த ஹெச். வசந்த குமார் உடல் நல்லடக்கம்

இதைத்தொடர்ந்து அவரது உடல் காலை 10:15 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர், அவரின் தாய் தங்கம்மை, தந்தை ஹரிகிருஷ்ணரின் நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது மகன்களான விஜய் வசந்த்தும் வினோத் குமாரும் இறுதிச் சடங்குகளை செய்தனர். இதைத்தொடர்ந்து உழைப்பால் உயர்ந்த ஹெச். வசந்த குமாரின் உடல் சொந்த ஊர்ப்பொதுமக்கள் மத்தியில் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.