ETV Bharat / state

வசந்தகுமார் மறைவு: 5 எம்எல்ஏக்கள் தலைமையில் மவுன ஊர்வலம்! - மௌன ஊர்வலம்

கன்னியாகுமரி: வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் இன்று நாகர்கோயிலில் வேப்பமூடு சந்திப்பில் தொடங்கி ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Vasanthakumar MP, demise: Silent procession led by 5 legislators in Nagercoil!
எம்பி வசந்த குமார் உயிரிழப்பு
author img

By

Published : Aug 29, 2020, 11:35 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நாளை (ஆக. 30) நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் தொடங்கிய மவுன ஊர்வலத்தில், கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன், பத்மநாபபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ், குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

வேப்பமூடு சந்திப்பில் தொடங்கிய மவுன ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.