உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேவுள்ள மாநகராட்சி பூங்காவில் விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்கள், பலியல் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும், உ.பி.யில் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:தலைமறைவான டிஐஜி தத்தா இந்தோ-நேபாள எல்லையில் கைது!