குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஜேமஸ்டவுண் பிச்சை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் மனைவி கஸ்தூரிபாய் (63), இவர் அதே பகுதியில் தனது வீட்டுடன் சேர்த்து மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று வழக்கம் போல் தனது கடையில் விற்பனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்பொழுது அவர் கடைக்கு வந்த இரண்டு நபர்கள், கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கஸ்தூரிபாய் அசந்த நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கஸ்தூரிபாய், இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், நகையை பறித்துக் கொண்டு தப்பிய நபர்கள் குறித்து விசாரனை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த அடையாளம் தெரியாத நபர்கள் - திருட்டு
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மளிகை கடை நடத்திவரும் மூதாட்டியின் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்றனர்.