கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி இரட்டை குளக்கரையிலிருந்து குலசேகரபுரம் செல்லும் சாலையின் அருகில் இருக்கும் வாழைத்தோட்ட வாய்க்காலில், 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
தலை தண்ணீரில் மூழ்கியும், உடல் வெளியேயும் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அஞ்சுகிராமம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
Rbi Recruitment 2019 நல்ல சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை!
இந்தச் சடலம் சுமார் 25 நாட்களுக்கு மேலாகக் கிடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடல் அழுகிய நிலையிலிருந்ததால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் சடலத்திலிருந்து பாகங்களை எடுத்து உடற்கூறாய்வுக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இறந்தவர் உடலின் புகைப்படத்தையும், அவரது அங்க அடையாளங்களையும் தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி, அங்கு காணாமல் போனவர்களின் பட்டியலைப் பெற்று அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க தனிப்படை காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.