ETV Bharat / state

பள்ளி ஆசிரியையிடம் இளைஞர்கள் செயின் பறிப்பு - பள்ளி ஆசிரியை

சங்கிலியை பறித்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் கிளாரன்ஸ் புகாரளித்தார்.

two youngsters involved in chain snatching

author img

By

Published : Jan 8, 2021, 11:47 AM IST

கன்னியாகுமரி:நாகர்கோவிலில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.

நாகர்கோவிலை சேர்ந்தவர் கிளாரன்ஸ், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியூர் சென்றுவிட்டு பால்பண்ணை சந்திப்பில் பேருந்திலிருந்து இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கிளாரன்ஸின் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். உஷாரான அவர், தனது சங்கிலியை கையால் இறுக பிடிக்கவே சங்கிலியில் அணிந்திருந்த டாலர் மட்டும் அவரது கையில் கிடைத்தது.

சங்கிலியை பறித்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் கிளாரன்ஸ் புகாரளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.