கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கீழஆசாரிப்பள்ளத்தில், பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அங்குள்ள தாமரைக்குளத்தில் மீன்பிடிக்கச்சென்றனர். பிறகு, மீன்பிடிக்கும் ஆர்வத்தில் மாணவர்கள் குளத்தில் குதித்துள்ளனர். அப்போது குளத்தில் இருந்த தாமரைச் செடிகளில் சிக்கி மாணவர்கள் நீரில் மூழ்கினர். இதில், நான்காம் வகுப்பு மாணவர் ஆல்பன்ராஜ், ஐந்தாம் வகுப்பு மாணவர் சேம்ஹர்சோன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் இமானுவேல் உயிர் தப்பி கரைக்கு வந்து பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இறந்த மாணவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அக்கா பாசத்திற்காக அடியாளாக மாறி கைதான சிலம்பாட்ட வீரர்; திகு திகு பின்னணி