இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவர் கைது
கன்னியாகுமரி : இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக இளைஞர்கள், மாணவர்களிடையே கஞ்சா உபயோகிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இதுவரை கஞ்சா கடத்துவதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்படி கோட்டாறு காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது நாகர்கோவிலில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவைக் கடத்திய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த செல்வ விஜய் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.