பன்னாட்டு தமிழுறவு மன்றம், அனைத்துத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையளிக்க வேண்டும், கோயில் கருவறையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓத வேண்டும், கோயில் குடமுழுக்கின்போது தமிழ் மந்திரங்களால் பிரார்த்தனை செய்ய வேண்டும், வியாபார மையங்களின் விளம்பரப் பலகையில் தமிழ் இடம்பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி ஊர்திப் பயணம் தொடங்கியது.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஊர்திப் பயணத்தை நடத்த இக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பயணத்திற்கு குமரி மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற தலைவர் தியாகி. முத்துகருப்பன் தலைமை வகித்தார்.
மேலும் கன்னியாகுமரியிலிருந்து வள்ளியூர், தூத்துக்குடி, ராஜபாளையம், மதுரை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய ஊர்களின் வழியாகச் செல்லும் இந்தப் பயணம் வரும் 25ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சூரிய மின்விளக்குப் பொறி பூச்சிகளை அழித்துவிடுகிறது' - விவசாயிகள் மகிழ்ச்சி