ETV Bharat / state

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: குமரியில் 75 % பேருந்துகள் இயங்கவில்லை! - kanniyakumari Transport workers protest

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் அரசு பணிமனை முன்பாக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Transport workers protest: 75% of buses in Kumari are not running
நாகர்கோவில் அரசு பணிமனை முன்பாக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது
author img

By

Published : Feb 26, 2021, 5:27 PM IST

கன்னியாகுமரி : ஊதிய உயர்வு, இடைக்கால நிவாரணம், முழுமையான ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட எட்டு தொழிற்சங்கங்களை கொண்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பணிமனை முன்பு இன்று (பிப்.26) பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 23ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த சூழலில், இதுவரை அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நாகர்கோவில் அரசு பணிமனை முன்பாக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 75% பேருந்துகள் இயக்கப்படவில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது. பலர் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்சோர்வுடன், மன உளைச்சலுடனும் காணப்பட்டனர்.

இதையும் படிங்க : முதன்மை கல்வி அலுவலர் ஆடியோ வைரல்- கல்வி ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.