தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக வருகிற 27, 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 30ஆம் தேதி அகஸ்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர், ஆகிய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட சகாய நகர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு குமரன்புதூர், திருநங்கைகள் காலனியைச் சார்ந்த திருநங்கை ராபியா பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவிடம் தன்னுடைய வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தார். தேர்தலில் திருநங்கை போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட ’திருநங்கை’ என்ற சொல்லை மாற்றப் போகிறதா அரசு?