ETV Bharat / state

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - thiruvalluvar statue

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

author img

By

Published : Jan 16, 2023, 10:20 AM IST

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இந்த காலங்களில் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம். குறிப்பாக மகர விளக்கு ஜோதி தரிசனம் முடிந்தபின் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வருகை தருவதால் கூட்டம் அலைமோதி காணப்படும்.

இதோடு பொங்கல் பண்டிகை காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர் . இதனால் கூட்டம் இரட்டிப்பாகியுள்ளது. இன்று (ஜனவரி 15) அதிகாலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.

முக்கடல் சங்கமிக்கும் கடல் நடுவே இருந்து சூரியன் உதிக்கும் கட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆன்மிக பயணிகளும் திரிவேணி சங்கமத்தில் கடலில் புனிதநீராடி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஆளுநரை 'போயா' என்றது மாபெரும் தவறு.. அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.