கன்னியாகுமரிக்கு உள்நாடு வெளிநாடு மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வரத் தடைவிதிக்கப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுப் போக்குவரத்து போன்றவை மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்த பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்தும், கடலில் நீராடியும் தங்களது நேரத்தைச் செலவழித்துச்சென்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு மூலம் செடி வளர்க்கலாம் - மத்தியப் பிரதேச சுய உதவிக்குழுவினரின் புது முயற்சி!