கன்னியாகுமரி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற எம்.பி. ஆனதால் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு வருகைத்தந்தார்.அங்கு அவர் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ''நான் நாங்குனேரி தொகுதிக்கு அதிகம் பரிச்சையமானவன். தொகுதியில் 1986 லிருந்து கழகத்தில் பல பொறுப்புகளில் ஏழை மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்'' எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்ட குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டுவந்த கல்லூரி மாணவி அவரது தந்தை விடுவிப்பு!