ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ நீதிமன்ற உத்தரவுபடி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை கண்டித்து மார்த்தாண்டம் அருகே நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், கன்னியாகுமரி தொகுதி எம்பி ஹெச். வசந்தகுமார், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார், ஊட்டி எம்எல்ஏ கணேஷ், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கட்சியினர் ஒத்துழைக்கததை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.