கன்னியாகுமரியில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சியின், கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 2 நாள் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் மாநிலத் தலைவா் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய பொன்குமார், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடாது. நலவாரியங்களைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் போராட முன்வரவேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ள நிலை உருவாகி உள்ளது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மீண்டும் நலவாரியங்களில் தனித்தனியாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இது குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலுக்கு உரிய எம் - சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எம் சாண்டு மணல் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதால், இந்தத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் இக்கூட்டத்தில் கட்டுமானம், மனைத் தொழிலில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும்; மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டினை உயர்த்திட சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க :வருத்தம் தெரிவித்திருந்தால் ரஜினியின் மதிப்பு கூடியிருக்கும்’ - வைகோ