ETV Bharat / state

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: கன்னியாகுமரியில் சோதனை - sri lanka

கன்னியாகுமரி: இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி
author img

By

Published : Apr 24, 2019, 12:19 PM IST

இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. அதுமட்டுமின்றி இன்றும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக இலங்கையின் அருகாமையில் உள்ள பல்வேறு நாடுகளில் கடலோரக் காவல் படையினர் மற்றும் கப்பல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரைக் கிராமங்களில் உள்ள சின்னமுட்டம், குளச்சல் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகள் வழியே செல்லும் வாகனங்களைக் கண்காணித்து வரும் கடலோரக் காவல் படையினர், சுற்றுலாப் பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கொண்ட ஆழ் கடல் பகுதிகளிலும் படகுகள் மூலம் சென்று கடலோர காவல் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN_KNK_03_23_SEASHORE_TEST_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி கன்னியாகுமரி இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் படகுகளில் சென்றும் மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் உள்ள 11 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையில் நேற்று ஈஸ்ட்டர் பண்டிகை அன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து உள்ளது. தொடர்ந்து இன்றும் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்ந்து உள்ளது. இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடன படுத்தபட்டு உள்ளது. இச் சம்பவம் காரணமாக இலங்கையின் அருகாமையில் பல்வேறு நாடுகளில் கடலோர காவல் படையினர் மற்றும் கப்பல் படையினர் தீவீர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவடத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 கடற்கரை கிராமங்களில் உள்ள சின்னமுட்டம், குளச்சல் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகள் மூலம் வரும் வாகனங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கடலோர காவல் படை குழுமத்தினர் சுற்றுலா பயனிகளின் உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அதனை போன்று ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கொண்ட ஆழ் கடல் பகுதிகளிலும் படகுகள் மூலம் சென்று கடலோர காவல் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஷ்வல்; 1. கன்னியாகுமரியில் கடலோர காவல் படை மற்றும் போலிசார் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களில் சோதனை. 2. சின்ன முட்டம் சோதனை சாவடி மையத்தில் வாகன சோதனை. 3. கடல் பகுதிகளில் படகுகளில் சென்று சோதனை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.