கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே எட்டாமடையைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வர்கீஸ் ராஜன். இவருக்கு மனைவி உஷா மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள வர்கீஸ் ராஜன், குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே நடந்த தகராறில் மனவிரக்தியாகி உஷா தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று வீட்டில் தீ வைத்து படுகாயமடைந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே உஷா உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உஷாவின் தாய், அண்ணன் உள்ளிட்ட உறவினர்கள், "வர்கீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்துதான் உஷாவினை தீ வைத்து கொலை செய்துள்ளனர். ஆனால், இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரையில் உஷாவின் உடலை வாங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனை முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.