கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கணினிமயம் என்ற பெயரில் கிராமிய அஞ்சலகங்களில் கடந்த 20 நாட்களாக எந்தப் பணிகளும் நடைபெறாமல் கிராமப்பகுதிகளில் அஞ்சல் பட்டுவாடா பணி, அலுவலகப் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதை சரிசெய்திட மாநில நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- கிராம அஞ்சலக பணியாளர்களை தேவையில்லாமல் அலுவலக பணிநேரம் முடிந்த பின்னரும் கணக்கு அலுவலகங்களில் காத்திருக்க வைப்பதை உடனடியாக நிறுத்திட வேண்டும் .
- மிக மோசமான சர்வர் பிரச்னைகளால் ஏற்படும் பணிமுடக்கத்திற்கு கோட்ட நிர்வாகம் உடனடி மாற்றுவழி ஏற்படுத்திட வேண்டும்
உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.