ETV Bharat / state

இந்திய ஆழ்கடல் பகுதியில் கப்பல் மோதி விபத்து: 12 இந்திய மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் மனு!

Tamil Nadu Fisherman: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, கப்பல் மோதி குமரியை சேர்ந்த விசைப்படகு கடலில் மூழ்கியதில் காயங்களுடன் தத்தளித்த 12 மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மீனவர்கள்
குமரி மீனவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 2:34 PM IST

இந்திய ஆழ்கடல் பகுதியில் கப்பல் மோதி விபத்து

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அதிலும் அரபிக்கடல் பகுதியில் உள்ள குளச்சல் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள் ஆழ்கடலில் 20 நாட்களுக்கு மேல் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான சென்ட் ஆன்டனிஸ் என்ற விசைப்படகில் 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அன்று தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

விசாரணை கைதிகள்: இந்திய மீனவர்கள் ஆழ் கடலில் சுமார் ஒரு மாதம் மீன் பிடித்து விட்டு கரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது ஆழ்கடலில் உள்ள ஒரு பகுதியில் மீனவர்களது சென்ட் ஆன்டனிஸ் விசைப்படகின் மீது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இழுவை கப்பலானது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.பின்னர் கப்பல் நிற்காமல் சென்றுள்ளது.

விபத்தில் படகு கடலில் மூழ்கி 12 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். கடலில் தத்தளித்த மீனவர்களை அந்த வழியாக வந்த மாலத்தீவு கடற்படையினர் மீட்டு அங்குள்ள தீவில் விட்டு விட்டு சென்றுள்ளனர். தற்போது 12 மீனவர்களும் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகியும் அருட் பணியாளருமான சர்ச்சில் கூறும் போது,"கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்று, மாலத்தீவில் உள்ள டீட்டென்ஷன் மையத்தில் வைத்துள்ளனர்.மீனவர்களின் விசைப்படகானது முழுவதும் கடலுக்குள் மூழ்கி இருக்கின்றது. படகில் இருந்த வலைகள், தூண்டில் மட்டுகள், எக்கோ சவுண்ட்டர், ஜி .பி. எஸ், ஏ.அய். எஸ், வயர்லெஸ் போன்ற கருவிகளும் மீன் பிடிக்க பயன்படுத்துகின்ற பிற கருவிகளும் மீனவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக பிடித்த 20 லட்சம் மதிப்புள்ள படகிலிருந்த மீன்களும் கடலில் மூழ்கியுள்ளது.

படகுடன் கடலில் மூழ்கடித்து பெரும் இழப்பை ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மாலத்தீவு அதிகாரிகள் இந்திய மீனவர்களை விசாரணை கைதிகளாக மாலத்தீவு டீட்டென்ஷன் சென்டரில் வைத்துள்ளனர். இது கண்டனத்திற்குரியதாகும். இதுபோன்று 14 சம்பவங்கள் நடந்துள்ளன அதன் பின்னரும் மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதுகுறித்து தமிழக கடலோர காவல் படையிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. மோதிய இழுவை கப்பலை மத்திய அரசு நினைத்தால் பத்து நிமிடங்களில் கண்டுபிடிக்கும்.

ரேடார் போன்ற பல்வேறு சாதனங்கள் இருந்தும் இந்த விஷயத்தில் அரசு மெத்தன போக்கை கையாளுவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட சிறையில் வாழும் மீனவர்களை உடனடியாக மீட்டு கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வரவேண்டும்” என கூறினார். மேலும் அருட்பணியாளர் சர்ச்சில் இந்திய வெளித்துறை அமைச்சர் ஜெயசங்கர், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ருபாலா, மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வழியாக 7 கோரிக்கைகள் முன் வைத்துள்ளார்.

கோரிக்கைகள்: தீவில் இருக்கும் மீனவர்களை மீட்டு வர வேண்டும். மேலும், பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், பிடித்து வரப்பட்ட மீன்கள் கடலில் மூழ்கி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விசைப்படகு மீது மோதிய கப்பலை அடையாளம் கண்டு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 7 கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசாணை 293ஐ அமல்படுத்தக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.