கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணையில் இருந்து, ஜூன் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நெல்லை மாவட்டம், ராதாபுரம் கால்வாய் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், நீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப நீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தோவாளை கால்வாய் – திருமூலநகர் கால்வாயில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் 52 குளங்களில் தண்ணீர் நிரப்பி, 15,987 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் விநாடிக்கு 150 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் நேரடியாக 15,987 ஏக்கரும், 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1,013 ஏக்கரும் பாசன வசதி பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம், வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞானதிரவியம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, வேளாண் அலுவலர்கள் ஷிஜா ஜான், வேணி உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 850 கன அடி நீர் திறப்பு!