ETV Bharat / state

காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்! - தக்கலை மாணவி வழக்கு

திருமண வயதை அடையாத பெண்ணை திருமணம் செய்து வைத்த பெற்றோர். காதலனை கரம் பிடிக்க முதலிரவன்று தர்ணாவில் ஈடுப்பட்ட பெண். காதலன் உட்பட அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை.

pocso act thuckalay
pocso act thuckalay
author img

By

Published : May 21, 2020, 3:56 PM IST

கன்னியாகுமரி: காதலனை கரம் பிடிக்க நினைத்து, போக்சோ சட்டத்தில் சிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் 17 வயதான சுகன்யா. இவர் தக்கலை அருகேயுள்ள கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது தினமும் நடைபயணமாக கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சாலையோர கடை வியாபாரியான சுதீஷ் என்பவரிடம் பொருட்கள் வாங்குவதில் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்ததோடு, அவ்வப்போது தனிமையிலும் சந்தித்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் சிறுமியின் தந்தை மாடசாமிக்கு தெரியவரவே, அவர் ஒரு மாதத்திற்கு முன் தனது மகளை வெளியில் விடாமல், அவசர அவசரமாக ஆறு நாட்களுக்கு முன், புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோலப்பன் மகன் விவேக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் நடைபெற்ற நிலையில், முதலிரவு அன்று விவேக் அறைக்குச் செல்லாமல், கைப்பேசியில் தான் முன்பு காதலித காதலனுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் தன்னை முதலிரவுக்கு வலியூறுத்த வேண்டாம் என்றும் சுகன்யா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவ்வேளையில் சுகன்யா தனது காதலன் சுதீஷை வீட்டிற்கு அழைத்ததாகத் தெரிகிறது. சுதீஷ் அங்கு வந்து தனது காதலியை அழைத்து செல்ல முயன்றுள்ளார். இதை கண்ட விவேக்கின் பெற்றோர் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, நிலைமை தலைகீழாக மாறியது. அங்கு வந்த தக்கலை காவல் துறையினர் சுகன்யாவிடம் விசாரித்துள்ளனர்.

சூறைக்காற்றால் தடுமாறி விழுந்த மீன் வியாபாரி; சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

அப்போது சுகன்யா தான் காதலனுடன் செல்ல விரும்புவதாக கூறியதையடுத்து, தக்கலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தனக்கு 17-வயதுதான் ஆகிறது என்றும், தான் காதலித்த சுதீஷை திருமணம் செய்துவைக்க விரும்பாத தனது தாய் - தந்தை தன்னை கட்டாயப்படுத்தி விவேக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தனது காதலன் சுதீஷ் உடன் ஏற்கனவே தாலி மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து காவல் துறையினர் மாணவி சுகன்யாவை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் விசாரணை செய்தபோது அந்த மாணவிக்கு 17 வயதே ஆன நிலையில், அவரது புகாரின் பேரில் கணவர் விவேக்., காதலன் சுதிஷ், தந்தை மாடசாமி., சித்தி சரஸ்வதி., மாமனார் கோலப்பன், மாமியார் ராதா ஆகியோர் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்கள் அனைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இரட்டை சகோதரிகள் ஒரே அறையில் தற்கொலை!

தனது திருமண வயது தெரியாமல், காதலனுடன் சேர நினைத்து; அதன் விளைவாக காதலனையே போக்சோ சட்டத்தில் சிக்க வைத்த விவகாரம் சுற்றுப்புற மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.