ETV Bharat / state

உப்புத் தொழில் அழியும் அபாயம்

கன்னியாகுமரி: உப்பளங்களை அரசு மறு ஒப்பந்தம் செய்ய கால நீட்டிப்பு செய்து கொடுக்காதால் உப்புத் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

File pic
author img

By

Published : Jun 5, 2019, 11:07 AM IST

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் உப்பை வாங்கக் கூடாது என்று 1909ஆம் ஆண்டு திருவனந்தபுரம் திருநாள் மகாராஜா கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உப்பளம் அமைத்து உப்புத் தொழிலை தொடங்கிவைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இப்பகுதியில் உப்பு தொழில் நடைபெற்றுவருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதியில் 80 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டவந்த நிலையில் தற்போது 10 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கு காரணம் உப்பளங்கள் மறு ஒப்பந்தம் செய்து காலநீட்டிப்பு செய்யப்படாமல் இருப்பதே என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கோவளம், வட்டகோட்டை பகுதியிலும் உப்பு தொழில் நடைபெறவில்லை. தற்போது ஒரு டன்னுக்கு 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விலையிருந்தாலும் தொழிலாளர்கள் சம்பளத்தை கணக்கிடும்போது உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

உப்பு தொழில் அழியும் அபாயம்

தற்போது உப்பு உற்பத்தி உணவுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனவே அரசு உடனடியாக செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உப்பளங்களை சிறு தொழிலாளர்களுக்கு மறு குத்தகை கொடுத்து கால நீட்டிப்பு செய்து, அழிந்துவரும் உப்புத் தொழிலை காக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பகுதிகளில் உப்பளங்களை அரசு மறு ஒப்பந்தம் செய்து கால நீட்டிப்பு செய்து கொடுக்காததால் உப்பு தொழில் அழியும் அபாயம். உப்பு உற்பத்தி தொழிலை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பகுதிகளில் உப்பளங்களை அரசு மறு ஒப்பந்தம் செய்து கால நீட்டிப்பு செய்து கொடுக்காததால் உப்பு தொழில் அழியும் அபாயம். உப்பு உற்பத்தி தொழிலை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் உப்பை வாங்கக்கூடாது என்று 1909ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மூலம்திருநாள்மகாராஜா உப்பு தொழில் செய்யும் தொழிலாளர்களை சாமிதோப்புக்கு அனுப்பி உப்பளம் அமைத்து உப்புத் தொழிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார் .அதிலிருந்து இந்தப் பகுதியில் உப்பு தொழில் நடைபெற்று வருகிறது .இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்து தமிழகத்தில் தூத்துக்குடி தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சாமிதோப்பு பகுதியில் சுமார் 80 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 10ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதியில் தற்போது உப்பளங்கள் மறு ஒப்பந்தம் செய்து காலநீட்டிப்பு செய்யப்படாமல் உள்ளதே இதற்கு காரணம் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான உப்பளங்களில் சுமார் 200 ஏக்கர் உப்பளங்கள் தான் மறு ஒப்பந்தம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களை துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைக்கப் போகிறோம் என்று மறுத்து காலநீட்டிப்பு செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் கோவளம் பகுதியிலும் உப்பு தொழில் நடைபெறவில்லை. அதுபோல் வட்டகோட்டை அருகே உள்ள பால்குளம் பகுதியில் உள்ள உப்பளமும் நிரப்பப்பட்டு அரசு கலைக் கல்லூரி மற்றும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கும் உப்பு உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது .கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் பரப்பு இருந்தும் அங்கு உப்பளம் அமைக்க களி பகுதிகள் இல்லாததால் அங்கெல்லாம் உப்பு தொழில் நடைபெறவில்லை .தற்போது ஒரு டன்னுக்கு 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விலையிருந்தாலும் தொழிலாளர்கள் சம்பளத்தை கணக்கிடும் போது உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .இதே நிலை நீடித்தால் நம் நாட்டில் உப்பில்லாமல் வெளிநாடுகளிலிருந்து உப்பை அதிக விலை கொடுத்து விலைக்கு வாங்கிய வேண்டிய நிலை நிலை வரும். தற்போது உப்பு உற்பத்தி தொழிலினால் வரும் உப்பு உணவுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே அரசு உடனடியாக செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உப்பளங்களை சிறு தொழிலாளர்களுக்கு மறுகுத்தகை கொடுத்து கால நீட்டிப்பு செய்து அழிந்து வரும் உப்புத் தொழிலை காக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.