ETV Bharat / state

நடைபாதை விவகாரம்: பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த டிஎஸ்பி மீது புகார்!

கன்னியாகுமரி: அழகப்பபுரம் அருகே நடைபாதை விவகாரம் குறித்து டிஎஸ்பி பாஸ்கரன் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறி இளம்பெண் ஒருவர் எஸ்பி, டிஐஜி, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார்.

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த டிஎஸ்பி மீது புகார்

author img

By

Published : Nov 11, 2020, 8:05 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாய ஜெய்சன். இவர், தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகப்பபுரம், அரசு மருத்துவமனை ரோட்டில் ஐந்து சென்டு மனையும், வீடும் உள்ளது. அந்த வீட்டில் அவரது மனைவி, குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

ஜெய்சனுக்கும் அவரது உறவினர் ஆல்டன் என்பவருக்கும் பாதை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஜெய்சனின் மனைவியை, டிஎஸ்பி பாஸ்கரன் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து ஆல்டனுக்கு 12 அடி பாதை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றதால் நவ.1 ஆம் தேதியன்று ஜெய்சன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த டிஎஸ்பி பாஸ்கரன், மரியாதையாக பாதை கொடுங்கள் இல்லை என்றால் மதிலையும் கேட்டையும் அவர்கள் உடைத்து விடுவார்கள் என ஜெய்சனின் மனைவியிடம் மிரட்டியுள்ளார்.

இருந்தும் அவர் சம்மதிக்காததால் மீண்டும் நவ.4 ஆம் தேதியன்று டிஎஸ்பி பாஸ்கரன் தனது அலுவலகத்திற்கு ஜெய்சனின் மனைவியை அழைத்து பாதை கொடுப்பேன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வற்புறித்தியுள்ளார்.

மேலும், கையெழுத்துப் போடவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதற்கு, ஜெய்சனின் மனைவி டிஎஸ்பி பாஸ்கரனிடம் நீதிமன்றம் மூலமாக தாங்கள் நிவாரணம் தேடிக் கொள்கிறோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த டிஎஸ்பி பாஸ்கரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆல்டனிடம் பொய்புகார் பெற்றுக்கொண்டு, அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வெளிநாட்டில் இருக்கின்ற ஜெய்சன் உள்பட நான்கு பேர் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும், டிஎஸ்பி துணையோடு ஆல்டன் அடியாள்களை அனுப்பி, ஜெய்சன் வீட்டின் காம்பவுண்ட், கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்குள்ள பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு, அப்பெண்ணை மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதனால், தனக்கு காவல் துறை தரப்பிலிருந்தும், எதிர் மனுதாரர் ஆல்டன் தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் தன்னை மிரட்டும் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட எஸ்பி, டிஐஜி, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் ஜெய்சனின் மனைவி புகாரளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சன் மனைவி

மேலும், தனியாக இருக்கும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் டிஎஸ்பி பாஸ்கரன் தன்னை மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் கருணாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.