கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிலுவைமுத்து என்பவரது வீட்டின் பின்னால் அவர் வளர்க்கும் ஆடுகள் கட்டிப்பட்டிருந்தன. தற்போதைய ஊரடங்கு காரணமாக அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்ததோடு அப்பகுதியில், வெளியே ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் அப்பகுதி அமைதியாக காணப்பட்டது.
இந்நிலையில் வீட்டிற்கு வெளியே தற்செயலாக வந்த சிலுவைமுத்து தனது ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இரு ஆடுகளின் கால்கள் மற்றும் எலும்புகள் மட்டுமே காணப்பட்டன. இறைச்சி பகுதிகள் அனைத்தும் அடையாளம் தெரியாத விலங்குகளால் தின்றது போல் தெரிய வந்தது.
அதன்பின் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அடையாளம் தெரியாத விலங்குகளின் கால் தடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். ஆடுகளை கடித்து தின்றது என்ன விலங்காக இருக்கும் என உறுதியாக கண்டறியப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.
தற்போது ஊரடங்கு காரணத்தினால் அனைவரும் வீடுகளில் அமைதியாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று ஆடுகளை கொன்று தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவத்தை களமிறக்குங்கள் : உச்ச நீதிமன்றத்தில் மனு