கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு மூன்று சுற்றுலா சீசன். கோடை விடுமுறை சீசனை தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா சீசன் கார்த்திகை மாத சீசன் ஆகும். இரண்டு மாத காலம் இது சீசன் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.
ஜனவரி 20ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த சுற்றுலா சீசன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தரும் காலமாகும்.
அந்த வகையில் இன்று(நவ.27) விடுமுறை நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதல்ல கன்னியாகுமரி வந்து குவிந்தனர்.
காலை சூரியன் உதயத்தை பார்த்து செல்பி எடுத்தும் கடலில் குளித்தும் உற்சாகமாக கொண்டாடினர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி களை கட்டி உள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!